Home நாடு பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி!

பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி!

595
0
SHARE
Ad

mic-palanivel-300x199கோலாலம்பூர், ஜூன் 18 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி ஒன்று, விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் நேற்று அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன.

கட்சியின் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தன்னைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் என்றும், பழனிவேல் உட்பட 5 பேர் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாகவும் கூறி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க தாங்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணி இன்னும் சில தினங்களில் ஏற்பாடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice