Home உலகம் தைவானில் நிலநடுக்கம்

தைவானில் நிலநடுக்கம்

546
0
SHARE
Ad

taiwan தைவான், மார்ச். 7-  வடக்கு தைவானில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது.

தைவானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீவாலின் துறைமுகத்தில் இருந்து 39 கி.மீ தூரத்துக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

இதனால் சேதம் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதியில் வெளியே வந்தனர்.