Home இந்தியா பகவத் கீதை போட்டியில் பரிசு பெற்ற இஸ்லாமிய மாணவிக்கு மோடி பாராட்டு!

பகவத் கீதை போட்டியில் பரிசு பெற்ற இஸ்லாமிய மாணவிக்கு மோடி பாராட்டு!

618
0
SHARE
Ad

pm-modi-and-maryam_650x400_61434631435புது டெல்லி, ஜூன் 19 –  “பகவத் கீதை’ போட்டியில் வெற்றி பெற்ற இஸ்லாமிய மாணவியைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அகில உலக கிருஷ்ணா அமைப்பு இஸ்கான் சார்பில், மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான பகவத் கீதை போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 90 அரசுப் பள்ளிகள் மற்றும் 105 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் பேட்டியில் பங்கேற்றனர். இதில், 6-ஆம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவி மரியம் ஆசிஃப் சித்திக் முதலிடம் பெற்றார். மதச் சார்புகள் இன்றி பகவத் கீதையின் கருத்துகளுக்காக அதனை விரும்பிப் பயின்ற அந்த மாணவிக்கும் அவரது பெற்றோர்களுக்கும் பலர்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அச்சிறுமியையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது மோடி, அச்சிறுமிக்குப் பல்வேறு மதங்கள் குறித்த புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அச்சிறுமி, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்குத் தனது சேமிப்பான 11,000 ரூபாயை நிதி உதவியாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

சிறுமியின் இந்தச் செயலால் நெகிழ்ச்சி அடைந்த மோடி, அச்சிறுமிக்குத் தனது ஆசிகளை வழங்கினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- “இளம் தோழி மரியம் ஆசிஃப் சித்திக்கைச் சந்தித்தேன். மதங்கள் குறித்தும் அதன் தத்துவங்கள் குறித்தும் அவர் காட்டும் ஆர்வம் அனைத்து இந்தியர்களுக்கும் உற்சாகமும், உத்வேகமும் அளிக்கக் கூடியதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.