Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணிக்கு 360 துணை ராணுவ வீரர்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்புப் பணிக்கு 360 துணை ராணுவ வீரர்கள்!

577
0
SHARE
Ad

admk-021d21-60சென்னை, ஜூன் 19 – 27-ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, 360 துணை ராணுவ வீரர்கள் நேற்று சென்னை சென்றுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 27-ஆம் தேதி 230 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

230 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கணக்கிடும் பணியில் போலீசாரின் உதவியுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு நிழற்படக் கருவிகள் பொருத்துவது, கூடுதல் காவலர்கள், துணை ராணுவப் படை வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் அன்று பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்தியத் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்திருந்தார்.

அதன்படி, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 360 பேர் துணை ராணுவ வீரர்கள் கோவையில் இருந்து நேற்று காலை 4.30 மணியளவில் சென்னை சென்றுள்ளனர்.