Home இந்தியா விஜயகாந்த் யோகா நிபுணர் ஆகிறார்!

விஜயகாந்த் யோகா நிபுணர் ஆகிறார்!

551
0
SHARE
Ad

vijayakanth-1சென்னை, ஜூன் 19- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வரும் 21ம் தேதி கட்சி நிர்வாகிகளுக்குத் தானே மின்னின்று பயிற்சியளிக்க, தேமுதிக  தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

வருடந்தோறும் ஜூன் 21ம் தேதியைச் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட  ஐ.நா.சபை வலியுறுத்திதுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட  மத்திய அரசும் பல ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணியில் இருப்பதால், விஜயகாந்தும் வரும் 21ம் தேதி ,கட்சியினருடன் யோகா தினத்தைச் சிறப்பாக கொண்டாடத்  திட்டமிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

யோகா தினக் கொண்டாட்டத்தில்  தேமுதிக கட்சியினர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனத் தே.மு.தி.க. நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக யோகா கற்று வரும் விஜயகாந்த், தானே முன்னின்று, கட்சியினருக்குப் பயிற்சி அளிக்க உள்ளார். இதற்காக, வெள்ளை நிறக் கால்சட்டை( pants),வெள்ளை நிற மேலாடை (t-shirt) அணிந்து வரும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டு ள்ளது.