Home கலை உலகம் ‘காக்கா முட்டை’ படத்திற்குக் கர்நாடகாவில் முழு வரிச்சலுகை!

‘காக்கா முட்டை’ படத்திற்குக் கர்நாடகாவில் முழு வரிச்சலுகை!

588
0
SHARE
Ad

the-crows-eggசென்னை, ஜூன் 20 – படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வசூலிலும் அதிக சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைத் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்கள். மணிகண்டன் இயக்கியிருந்தார். இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு முழுமையான வரிச் சலுகை கொடுத்திருக்கிறது. தமிழ்ப் படத்திற்குக் கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு அமிதாப் நடித்த ‘பா’ படத்திற்கு 50% வரிச்சலுகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் முழுமையான வரிச்சலுகை கிடைத்திருப்பது படக்குழுவினரைச் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.