Home நாடு பிரபல எழுத்தாளர் செர்டாங் எல்.முத்து காலமானார்!

பிரபல எழுத்தாளர் செர்டாங் எல்.முத்து காலமானார்!

747
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோலாலம்பூர், ஜூன் 20 – மலேசியாவின் பிரபல எழுத்தாளர் செர்டாங் எல்.முத்து கார் விபத்து ஒன்றில் காலமானார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

63 வயதான எல்.முத்துவுடன் அவரது மனைவி திருமதி உஷா முத்துவும் இந்த கார் விபத்தில் மரணமடைந்துள்ளது ஒரு சோக நிகழ்வாகும்.

இளம் வயதில் “செர்டாங் எல்.முத்து” என்ற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதி மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனிமுத்திரை பதித்த அவர் பல சிறுகதைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

பின்னர் சொந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய அவர், கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வீடுகள் கட்டித் தரும் வர்த்தகத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு உயர்ந்தார்.

தொடர்ந்து அவ்வப்போது எழுத்துலகில் ஈடுபட்டு வந்த எல்.முத்து, பின்னர் மலேசிய இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும், எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு வழங்கியும், பொருளுதவிகள் செய்தும் உதவிக் கரம் நீட்டி வந்தார்.

எல்.முத்துவையும் அவரது துணைவியாரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்குச் ‘செல்லியல்’ சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.