Home இந்தியா பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மோடி – நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த மோடி – நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

594
0
SHARE
Ad

modi-rahul-sl-2-2-2012புதுடெல்லி, ஜூன் 20 – காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி தனது 45-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

புதுடெல்லியில் ராகுல் காந்தி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது பல ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதன் முறையாகும். இந்த ஆண்டு ராகுல் டெல்லியில் பிறந்தநாளைக் கொண்டாடியதால் அவரது பிறந்தநாள் விழா ஏற்பாடுகளைக் கட்சியின் தொண்டர்கள் வெகு விமரிசையாகச் செய்திருந்தனர்.

ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு,  புது டெல்லியிலுள்ள அவரது இல்லத்தின் முன் அவரை வாழ்த்துவதற்காக நேற்று காலை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

#TamilSchoolmychoice

ராகுல் காந்திக்கு 45-வது பிறந்தநாள் என்பதை நினைவுபடுத்தும் வகையில் தொண்டர்கள் சார்பில் 45 கிலோ எடையுள்ள கேக், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியின்போது வெட்டப்பட்டது. தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் சோனியா காந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகளிர் காங்கிரசார் என ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;

ராகுல் காந்தியின் ஆரோக்கியத்துக்காகவும், அவர் நீண்டநாள் வாழவும் இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்திக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டரில், உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.