பெய்ஜிங், ஜூன் 20 – மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் வகையில் இதயத்துடன் கூடிய புதிய எந்திரம் ஒன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எந்திரத்தை ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங் என்னும் ஏந்திரன் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவும், உணர்ச்சிகளை அறியும் புதிய தொழில்நுட்பமும் இதில் பயனப்படுத்தப்பட்டு இருப்பதால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிபாடுகள் மற்றும் குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு ஆகும்.
பெப்பர் எந்திரத்தை அமெரிக்க டாலர் 2550 என்ற அளவில் விற்பனை செய்ய சாஃப்ட் பேங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விற்பனை தற்போது ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், அடுத்த ஆண்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.