Home நாடு மனிதக் கடத்தல் விவகாரம்: அரச விசாரணை அமைக்கும் திட்டம் இல்லை – சாகிட்!

மனிதக் கடத்தல் விவகாரம்: அரச விசாரணை அமைக்கும் திட்டம் இல்லை – சாகிட்!

530
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiகோலாலம்பூர், ஜூன் 22 – மனிதக் கடத்தல் விவகாரம் தொடர்பாக அரச விசாரணை ஆணையம் அமைக்கும் திட்டம் தற்போது இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாகிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

மலேசியா-தாய்லாந்து எல்லைகளில் ஆட் கடத்தல் நடத்தப்படுவது குறித்து அரச விசாரணை அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு சாகிட் ஹமீடி கூறுகையில், “அரசு தற்போது மலேசியா-தாய்லாந்து எல்லைகளில் பாதுகாப்பினைப் பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக இரு நாடுகளும் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. குடிமக்களின் பாதுகாப்பில் எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளும் எண்ணமில்லை. அதற்காக அரச விசாரணை அமைக்கப்படுமா? என்றால் அத்தகைய ஆணையத்தை எழுப்பும் அவசியம் தற்போது இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்கடத்தல் விவகாரத்தில் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டதற்கு, “இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் எத்தகைய பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆள் கடத்தல் தொடர்பாக இதுவரை மலேசிய-தாய்லாந்து எல்லைகளில் 28 ஆள் கடத்தல் முகாம்களும், 139 சவக் குழிகளும் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.