Home கலை உலகம் இளமையாக இருக்க யோகா அவசியம் – ஷில்பா ஷெட்டி பேட்டி!

இளமையாக இருக்க யோகா அவசியம் – ஷில்பா ஷெட்டி பேட்டி!

794
0
SHARE
Ad

348404-afp-shilpa-shetty-doing-yoga-edபெங்களூரு, ஜூன் 22 – வாரத்தில் மூன்று நாட்கள் 15 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக வாழ முடியும். யோகாவால் இளமையுடன் உடலைப் பேண முடியும் என்று இந்தி சினிமா நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்.

பெங்களூரில் நடைபெற்ற  அனைத்துலக யோகா தின விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஷில்பா ஷெட்டி இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: “இளைஞர்களிடம் உடற்பயிற்சி மோகம் அதிகமாக இருந்த காலத்தில் யோகா குறித்து குறுந்தட்டு ஒன்றை வெளியிட்டேன்”.

“மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. யோகா செய்வதால் சாந்தி, மன அமைதி, நிம்மதி ஏற்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் 15 நிமிடங்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும்”.

#TamilSchoolmychoice

“தற்போது மக்களுக்குப் புதிய நோய்கள் பரவி வருகின்றன. இதைத் தடுக்க யோகா பயற்சி முக்கியம். யோகா பயிற்சி மேற்கொள்ளுவதால் உடல் அழகு ஏற்படுகிறது. தற்போது நான் யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதால் உடலை இளமையாக வைத்துக்கொள்ள முடிகிறது”.

shilpa shetty“நான் பெங்களுருக்கு வந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது”.

“கன்னடப் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. தற்போது குழந்தையைக் கவனித்து கொண்டு இருப்பதால் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.