Home நாடு சிறுநீர் அருந்துமாறு ஆசிரியர் கூறவில்லை – தாஜுல் உருஸ் விளக்கம்

சிறுநீர் அருந்துமாறு ஆசிரியர் கூறவில்லை – தாஜுல் உருஸ் விளக்கம்

650
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், ஜூன் 23 – இஸ்லாம் அல்லாத மாணவர்களை சிறுநீர் அருந்துமாறு ஆசிரியர் கூறவில்லை எனக் கெடா கல்வி, போக்குவரத்து மற்றும் பொதுப்பணிக் குழுவின் தலைவர் டத்தோ தாஜுல் உருஸ் தெரிவித்துள்ளார்.

அக்குறிப்பிட்ட ஆசிரியர் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றும், அவர் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் தாஜுல் உருஸ் விளக்கமளித்துள்ளார்.

தஞ்சோங் தாவாய் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அவர் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைக்கையில், அக்குறிப்பிட்ட ஆசிரியர் நகைச்சுவையாகச் சில வார்த்தைகளைக் கூறியதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

” ‘jangan minum air kencing kamu pula’ (don’t you instead drink your own urine) என்று அவர் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சில மாணவர்கள் இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டதால் இது விவகாரமாகிவிட்டது. இதையடுத்துச் சில பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்,” என்று அறிக்கை ஒன்றில் தாஜுல் உருஸ் குறிப்பிட்டுள்ளார்.

அக்குறிப்பிட்ட ஆசிரியருக்குத் தொலைபேசி வழி மிரட்டல்கள் வந்திருப்பதாகவும், அவர் மாணவர்களிடம் கூறிய வார்த்தைகள் தொடர்பில் பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது அவர் மேலும் கூறினார்.

“இந்த விளக்கத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இனிமேலும் இதை அரசியல் ரீதியாகவோ, இன ரீதியாகவோ பெரிதுபடுத்தக் கூடாது,” என தாஜுல் உருஸ் வலியுறுத்தியுள்ளார்.