Home நாடு மஇகா : தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு முழு விசாரணை ஜூலை 10இல்!

மஇகா : தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு முழு விசாரணை ஜூலை 10இல்!

842
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 23 – கடந்த ஜூன் 15ஆம் தேதி சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அங்கீகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இடைக்காலத் தடையுத்தரவு கோரி, பழனிவேலுவும் அவரது குழுவினரும் சமர்ப்பித்திருந்த விண்ணப்பம் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற துணைப் பதிவதிகாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Palanivel-and-MICஇதனைத் தொடர்ந்து இருதரப்புகளும் தங்களின் சத்தியப் பிரமாண ஆவணங்களையும் (Affidavits) வழக்கு சம்பந்தமான மற்ற ஆவணங்களையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும், எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான எழுத்துபூர்வமான வாதப் பிரதிவாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடைக்காலத் தடையுத்தரவு கோரும் வழக்கின் முழுவிசாரணை எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில்  ஜூன் 15ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு இன்னும் நடைமுறையில் இருந்து வரும். காரணம், இந்தத் தீர்ப்பின் மீது இதுவரை உயர்நீதிமன்றம்  தற்காலிக இடைக்காலத் தடையுத்தரவு எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி முழுமையான வழக்கு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் வரையில் மஇகா வழக்கு தொடர்பான தீர்ப்பு நடப்பில் தொடர்ந்து இருந்து வரும்.

(மேலும் செய்திகள் தொடரும்)