Home உலகம் ‘டைடானிக்’ இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்!

‘டைடானிக்’ இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்!

562
0
SHARE
Ad

hornerலாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 23 – ‘டைடானிக்’, ‘அவதார்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், தெற்கு கலிபோர்னியாவில் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 61.

விமானியாகப் பயிற்சி பெற்றுள்ள ஹார்னர், தனது சொந்த விமானத்தில் நேற்று சென்ற போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அவருடைய வழக்கறிஞர் ஜே கூப்பர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 1953-ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் ஹார்னர். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இசை பயின்றார். கடந்த 1970-களின் இறுதியில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 1982-ல் வெளியான ஸ்டார் டிரெக் 2 இவருக்கு நல்ல பெயரை அளித்தது. ஏலியன்ஸ், பிரேவ் ஹார்ட், அப்போலோ 13, ஏ பியூடிஃபுல் மைண்ட், அவதார் போன்ற படங்களுக்கு மகத்தான இசையை அளித்தார். டைட்டானிக் படத்தால் இவர் உலகப் புகழ் பெற்றார். அந்தப் படத்தின் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.