Home உலகம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை – பசில் ராஜபக்சே!

வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை – பசில் ராஜபக்சே!

600
0
SHARE
Ad

Basil-720x480கொழும்பு, ஜூன் 23 – வியட்நாமிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தான் முதலீடுகள் செய்யவில்லை என்று ராஜபக்சே தம்பியும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்செ தெரிவித்துள்ளார்.

வியட்நாமுக்குப் பணத்தை அனுப்பும் அளவுக்குத் தம்மிடம் பணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய்க்குப் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றும் அவர் கொழும்பில் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் தமக்கு வங்கிக்கணக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதனைத் தாம் வருடந்தோறும் வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தாம் பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பொருளாதாரம் சிறப்பானதாகவே அமைந்திருந்ததாகவும் கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பசில் தெரிவித்துள்ளார்.