Home நாடு மஇகா: 2009 மத்தியச் செயலவை அங்கீகரிப்பு – சங்கப் பதிவிலாகா தேர்தல்களுக்கு அக்டோபர் வரை நீட்டிப்பு!

மஇகா: 2009 மத்தியச் செயலவை அங்கீகரிப்பு – சங்கப் பதிவிலாகா தேர்தல்களுக்கு அக்டோபர் வரை நீட்டிப்பு!

533
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 23 – கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, சங்கப் பதிவிலாகா மஇகாவின் 2009 மத்திய செயலவையை அங்கீகரித்துள்ளது. மேலும் மஇகா உட்கட்சித் தேர்தல்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கக் கால அவகாச நீட்டிப்பையும் வழங்கியுள்ளது.

subra-health-dentists-1இதனை மஇகா இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்தார். சங்கப் பதிவிலாகாவுக்குத் தாங்கள் கடிதம் எழுதியதாகவும் அதற்குப் பதிலாகச் சங்கப் பதிவிலாகா அக்டோபர் மாதம் வரை தேர்தல்கள் நடத்த அனுமதி அளித்திருப்பதாக அவர் கூறினார்.

நேற்று, சுகாதார அமைச்சு கோலாலம்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரா, சங்கப் பதிவிலாகாவின் உறுதிக் கடிதத்தையும் காட்டினார்.

#TamilSchoolmychoice

“எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், ஜூலை 10 முதல், கிளைகளுக்கான தேர்தல்கள் தொடங்கும். நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்தால் அதற்கேற்ப நாங்கள் சட்டப்படி நடந்து கொள்வோம்” என்றும் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் சுப்ரா கூறினார்.

பழனிவேல் கட்சி உறுப்பியத்தை இழந்தது மறு உறுதி

இதற்கிடையில், பழனிவேலுவின் மஇகா உறுப்பியம் குறித்துக் கருத்துரைத்த டாக்டர் சுப்ரா, ஜூன் 21இல் கூடிய மஇகா கிளைத் தலைவர்களின் சிறப்புப் பேரவையும், 2009 மத்தியச் செயலவையும் பழனிவேலுவையும் மற்ற நால்வரையும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும் விளக்கினார்.

“நாங்கள் செய்ததெல்லாம் மஇகா சட்டவிதி 91 இன் முழுமையாள அர்த்தத்தை உறுதிப்படுத்தியதுதான். அந்தச் சட்டவிதியின்படி, பழனிவேலுவும் அவரது குழுவினரும் அவர்களாகவே தன்னிச்சையாக, மத்திய செயலவையின் முன்அனுமதியின்றியும், மத்தியச் செயலவையின் முடிவுக்கு எதிராகவும் நீதிமன்றம் சென்றனர் என்பதால் அவர்களின் மஇகா உறுப்பியத்தை இயல்பாகவே இழக்கின்றனர் என்பது மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் முறையாக அறிவித்தோம். அவ்வளவுதான். இதையேதான் நீதிபதியும் வழக்கு தொடுத்த பழனிவேலுவும் மற்ற நால்வரும் கட்சி மத்திய செயலவையின் அனுமதியின்றித் தனிநபர்களாக நீதிமன்றம் வந்திருக்கின்றனர் எனத் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்” என்று அவர் மேலும் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்.