Home தொழில் நுட்பம் ஜிமெயிலில் ‘அன்டு சென்ட்’ சேவை அமலுக்கு வந்தது!

ஜிமெயிலில் ‘அன்டு சென்ட்’ சேவை அமலுக்கு வந்தது!

529
0
SHARE
Ad

Gmail now has an 'undo send' buttonகோலாலம்பூர், ஜூன் 24 – உதிர்த்த வார்த்தைகளையும், அனுப்பிய மின்னஞ்சல்களையும் திரும்பப் பெற முடியாது என்பது தொழில்நுட்பப் புது மொழி. இதில் கூகுள் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஜிமெயிலில் இனி அனுப்பிய மின்னஞ்சல்களைக் குறிப்பிட்ட சில நொடிகளில் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கூகுள் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த ‘அன்டு சென்ட்’ (Undo Send) சேவை அமலுக்கு வந்தாலும், உலக அளவில் மேம்பாடு அடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கூகுளின் ஜிமெயில் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில மாதங்களாகவே இந்தச் சேவையை எங்களது ஆய்வகத்தில் பரிசோதனை செய்து வந்தோம். இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்தச் சேவை திருப்தியை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஜிமெயிலில்  இந்தச் சேவையை மேம்படுத்த கீழ்க் காணும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்:

#TamilSchoolmychoice

gmail2_3350819bஜிமெயில் ‘செட்டிங்ஸ்’ (Settings) பிரிவில் அன்டு சென்ட் என்ற தேர்வில் நாம் அனுப்பிய மின்னஞ்சல்களைத் திரும்பப் பெறுவதற்கான நொடிகளை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் குறிப்பிட்ட அந்த நொடிகளுக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் நமது மின்னஞ்சல்களை அதிகபட்சமாக 30 வினாடிகளுக்குள் மட்டுமே திரும்பப் பெறமுடியும். 30 வினாடிகளுக்கு மேல் சென்றால், மின்னஞ்சல் வழக்கம் போல் நாம் அனுப்பும் நபர்களுக்குச் சென்றுவிடும்.

இந்தச் சேவையின் காணொளியைக் கீழே காண்க: