Home கலை உலகம் கமலின் பாபநாசம் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

கமலின் பாபநாசம் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

481
0
SHARE
Ad

IMG_3972-copyசென்னை, ஜூன் 25 – கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பாபநாசம். இப்படத்தை ஜூத்து ஜோசப் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசை ஜிப்ரான்.

பாபநாசம் படம் நேற்று தணிக்கைக்குழுவின் பார்வைக்குச் சென்றது. எந்தவிதக் காட்சி நீக்கமும் இன்றி ‘யூ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிற்கு கமல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு, எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் வெளியாகவிருப்பது கமல் ரசிகர்களுக்குக் கமல் தரும் விருந்து என்றே சொல்லப்படுகிறது.

பாபநாசம் ‘யூ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது என்பதைப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் படம் வெளியீட்டு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். பாபநாசம் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் மறுபதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.