Home நாடு “பழனிவேல் கூட்டவிருக்கும் மத்தியச் செயலவை முறையற்றது” – சுப்ரா அறிவிப்பு!

“பழனிவேல் கூட்டவிருக்கும் மத்தியச் செயலவை முறையற்றது” – சுப்ரா அறிவிப்பு!

635
0
SHARE
Ad

subra-health-dentists-1கோலாலம்பூர், ஜூன் 25 – டத்தோஸ்ரீ பழனிவேல் இன்று கூட்டவிருக்கும் மத்தியச் செயலவை முறையற்றது என மஇகா-வின் இடைக்காலத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்று டாக்டர் சுப்ரா வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “இன்று மாலை 5 மணியளவில் (25 ஜூன்) புல்மான் தங்கும்விடுதியில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டத்தைப் பழனிவேல் கூட்டவுள்ளதாக ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எல்லா மஇகா உறுப்பினர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இது உறுப்பினர் அல்லாதவர்களால் நடத்தப்படும் ஒரு முறையற்ற கூட்டம். அதனால் அப்பாவி மஇகா உறுப்பினர்கள் யாரும் அந்த முறையற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

“இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பழனிவேல் தனது உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டார். எனவே இது ஒரு முறையற்ற கூட்டம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நிராகரிக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

“சங்கப் பதிவிலாக்காவால் அங்கீகரிக்கப்பட்ட 2009 மத்தியச் செயலவைக் கட்சியில் தேர்தலை நடத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி உள்ளது. மேலும், கட்சியில்  தேவையில்லாத சர்ச்சைகளை நீக்கி  இயல்புநிலை திரும்புவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கிடையே, மஇகா-வின் முன்னாள் தலைவர்கள் சிலர் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. இதனை மஇகா உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளாமல் கட்சியை வலுப்படுத்துவதில் தன்முனைப்புடன் செயல்பட வேண்டும் “என்று அவர் தெரிவித்துள்ளார்.