Home இந்தியா 100 ‘ஸ்மார்ட் சிட்டிகள்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் மோடி!

100 ‘ஸ்மார்ட் சிட்டிகள்’ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் மோடி!

443
0
SHARE
Ad

modis-vision-about-smart-cities-projectபுதுடெல்லி, ஜூன் 25 – நாட்டின் 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டிகளாக’ மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதேபோல் வாஜ்பாய் பெயரிலான அம்ருத் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

நாட்டில் நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ஆகிய 3 திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.

தமிழ்நாட்டில் 6 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும். இதேபோன்று அம்ருத் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 33 நகரங்கள் புணரமைக்கப்பட உள்ளது.

#TamilSchoolmychoice

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார காரணங்களால் பல்வேறு நகரங்களில் வசித்து வரும் பொதுமக்கள், பெரு நகரங்களுக்குச் செல்கின்றனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. 2050-ல் சுமார் 81 கோடி பேர் நகரங்களில் வசிப்பார்கள் என மதிப்பிடப்பட்டு உள்ளதால் அதற்கு ஏற்ற வகையில் நகரங்களை மேம்படுத்துவது அவசியம்.

இந்தச் சவால்களை எதிர்கொள்வதன் ஒருபகுதியாக ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார்.