Home கலை உலகம் தனுஷின் ‘மாரி’ பட 2-வது முன்னோட்டம் வெளியீடு!

தனுஷின் ‘மாரி’ பட 2-வது முன்னோட்டம் வெளியீடு!

595
0
SHARE
Ad

znjmTNnசென்னை, ஜூன் 26 – தனுஷ்-காஜல் அகர்வால் நடித்த ‘மாரி’ படத்தின் அதிகாரப்பூர்வ 2-வது முன்னோட்டம் நேற்று வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடிப் பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது தனுஷை வைத்து ‘மாரி’ படத்தை இயக்கியுள்ளார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பின்னணிப் பாடகரான விஜய் யேசுதாஸ், மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

#TamilSchoolmychoice

இப்படத்தைத் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவைச் செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் முன்னோட்டம் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் 2-வது முன்னோட்டம் நேற்று வெளியாகி, இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும், இந்த முன்னோட்டத்தை இதுவரை 4.5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜூலை 17-ஆம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனுஷின் ‘மாரி’ பட 2-வது முன்னோட்டத்தைக் கீழே காணலாம்: