Home இந்தியா 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிப்பு!

2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிப்பு!

490
0
SHARE
Ad

indian-rupee1மும்பை, ஜூன் 26 – கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் டிசம்பர் 31 வரை காலக்கேடு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து  கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தது.

இதற்கான இறுதிக் கெடு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வரை இருந்தது. இருப்பினும் பெரும்பாலானோர் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றவில்லை. பின்னர் இந்த மாதம் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போது டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது.

இதை வைத்துப்  பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். போலி ரூபாய் நோட்டுக்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டே திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

வங்கிகளும் 2005க்கு முந்தைய நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

பொதுமக்கள் வங்கிகளில் எத்தனை ரூபாய் நோட்டு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.  எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.  ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்குப் பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.