Home இந்தியா ஆர்.கே.நகர் தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் – ஜெயலலிதா!

ஆர்.கே.நகர் தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் – ஜெயலலிதா!

585
0
SHARE
Ad

jaya-2yearsசென்னை, ஜூன் 26 – ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு அத்தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்;

“என் மீது எல்லையில்லாத அன்பும், அக்கறையும் கொண்டிருக்கும் மக்கள், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், கட்சியின் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

#TamilSchoolmychoice

“எனக்கு எதிராகப் பின்னப்படுகின்ற அரசியல் சதி வலைகளையும், என் மீது நடத்தப்படுகின்ற எண்ணற்ற தாக்குதல்களையும் வாக்காளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்”.

“விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது வாக்காளர்களுக்குத் தெரியாதது அல்ல”.

“அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட நான், தமிழக மக்களுக்காகவே எனது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறேன்”.

“இந்தக் காரணத்தாலேயே அரசியலுக்குள் நுழைந்த நாளில் இருந்து, தொடர்ந்து எனக்கு எதிராக பல கொடுமையான செயல்களை எனது அரசியல் எதிரிகள் செய்த வண்ணம் உள்ளனர்”.

“என் மீது நீங்களும், உங்கள் மீது நானும் கொண்டிருக்கும் பற்றும், பாசமும்தான் தொடர்ந்து என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அன்பின் காரணமாகத் தான் மீண்டும் மீண்டும் மக்களிடம் வருகிறேன். அவர்களின் அன்பைப் பெறுகிறேன்”.

“தமிழக மக்களுக்கு நாடே போற்றும் நல்ல பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதை அறிவீர்கள். ஏழை, எளிய, ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்ற லட்சியத்துக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்”.

“ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 22-ஆம் தேதியன்று பல்வேறு இடங்களில் நேரில் சந்தித்து வாக்கு கேட்டபோது, நீங்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்பையும், உளப்பூர்வமான ஆதரவையும் கண்டு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்” என்று அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.