Home உலகம் செயற்கை இரத்தத்தைக் கண்டுபிடித்துச் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்!

செயற்கை இரத்தத்தைக் கண்டுபிடித்துச் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்!

673
0
SHARE
Ad

artificial_blood_002பிரிட்டன், ஜூன் 26 – மனிதர்கள் உயிர் வாழ அவசியமான இரத்தத்தின் தேவை உலக அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை இரத்தத்தை’த் தயாரித்து அதனைப் பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துலக அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இரத்தத்தைப் பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது.

ஆனால், இரத்த வங்கிகளில் உள்ள இரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இந்தப் பற்றாக்குறையைப் போக்க, பிரித்தானியாவில் உள்ள ‘தேசிய சுகாதாச் சேவை, ‘செயற்கை இரத்தம்’ (National Health Service, ‘synthetic blood’) என்று சொல்லக்கூடிய செயற்கை இரத்தத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மனிதன் உயிர் வாழ இரத்தம் மிக அவசியமானது என்ற உண்மையை 1940-ஆம் ஆண்டுகளிலேயே மருத்துவர்கள் உணர்ந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இரத்தத்தைச் செயற்கையாகத் தயாரிக்கும் ஆய்வுகள் மற்றும் அதற்கான பணிகள் அதே ஆண்டிலேயே தொடங்கியுள்ளது.

பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மருத்துவர்கள் முதன் முதலாகச் ‘செயற்கையான இரத்தத்தைத்’ தயாரித்து அதனைப் பரிசோதனை செய்தனர்.

ஆனால், உடலில் ஏற்றப்பட்ட இந்த செயற்கை இரத்தம் சுமார் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இரத்தம் இயற்கையாகவே செயல்படும் வகையில் ரத்தம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால், நவீன முறைகளில் செயற்கை இரத்தத்தைத் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை (National Health Service) செயற்கை இரத்தத்தைத் தயாரிக்கும் பணியைப் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கி இருந்தாலும், அதனை வெற்றிகரமாகப் பரிசோதிக்கும் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் எனத் தற்போது தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயற்கை ரத்தம் குறித்துப் பேசிய மருத்துவரான நிக் வாட்கின்ஸ் (Nick Watkins) “இந்தச் செயற்கை இரத்தம் பரிமாற்றமானது தொற்று நோயை ஏற்படுத்தாது. இரத்தப் பரிமாற்றம் செய்யும்போது எய்ட்ஸ் நோய் பரவும் அபாயத்தையும் இந்தச் செயற்கை இரத்தம் முற்றிலுமாக நீக்கிவிடும்” என்றார்.