Home உலகம் ஒபாமா போல் இல்லாமல் செயலில் திறமையைக் காட்டுவேன் – பாபி ஜிண்டால்

ஒபாமா போல் இல்லாமல் செயலில் திறமையைக் காட்டுவேன் – பாபி ஜிண்டால்

617
0
SHARE
Ad

bobby-jindal56767வாஷிங்டன், ஜூன் 26 – அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாகப் பேசாமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன் என்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் பேட்டியிட்டுள்ள பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார். இவரது பதவிக்காலம், 2016 ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பாபி ஜிண்டால் தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் துவக்கினார்.

அப்போது பாபி ஜிண்டால் பேசியதாவது; “அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன்.

#TamilSchoolmychoice

ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று, யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரிக்கர்கள் தான்” என்றார்.

பிரச்சாரம் தொடங்கியதுமே பாபி ஜிண்டால் பேசிய இந்தக் கருத்து டுவிட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அதிபர் ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் மூன்றாவது முறையாகப் போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.