Home நாடு மலையேற்ற வீரர் மாயம்: தேடும் பணியில் முன்னேற்றம் இல்லை

மலையேற்ற வீரர் மாயம்: தேடும் பணியில் முன்னேற்றம் இல்லை

545
0
SHARE
Ad

hashersearchகாஜாங், ஜூன் 29 – புக்கிட் ஹதாமாசில் மாயமான மலையேற்ற வீரரைத் தேடும் முயற்சியில் அவரது சக வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் இதுவரை தேடுதல் பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்களிடையே விரக்தி நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையேற்ற வீரர் தியோ கிம் லியன் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புக்கிட் ஹதாமாஸ் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி இருப்பதாகவும், எனினும் இதுவரை தியோ குறித்து எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் லெப்டினன் கர்னல் ஹர்டியால் சிங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இத்தகைய சூழ்நிலையில் தியோவைக் கண்டுபிடிப்பதில் இந்து மற்றும் புத்த மத ஆன்மீகவாதிகளின் (மாந்திரீகர்கள்) உதவி நாடப்பட்டுள்ளது. எந்தத் திசையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடத்துமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஹர்டியால் கூறினார்.

“மலையடிவாரத்தின் வடமேற்குத் திசையில் தேடுமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது. எனவே அத்திசையில் தேடப் போகிறோம். தியோவைக் கண்டுபிடிக்கும் வரையில் தேடுதல் நடவடிக்கை நீடுக்கும்,” என்றார் ஹர்டியால்.

தியோவைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வியாழக்கிழமையும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது என்று கூறினார்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி புக்கிட் ஹதாமாஸ் பகுதியில் ஓட்டப் பயிற்சிக்குச் சென்ற மலையேற்ற வீரர் தியோவ் மீண்டும் திரும்பவில்லை.