Home உலகம் இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளன – அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளன – அமெரிக்கா குற்றச்சாட்டு!

601
0
SHARE
Ad

india-button-flag-mapவாஷிங்டன், ஜூன் 27 – இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி, உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014-ஆம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “உலக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகும். ஒரு சில வன்முறை சம்பவங்களைத் தவிர தேர்தல் மிகவும் முறையாக நடைபெற்றது”.

“இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த மனித உரிமை மீறல்களில் காவல்துறையினரும்  மற்றும் பாதுகாப்புத் துறையினரால் பொது மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். மக்களை இவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்”.

#TamilSchoolmychoice

“பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வரதட்சணைக் கொடுமைகள், ஊழல், குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை, ஜாதி, மத மோதல், மத வன்முறை போன்றவை இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களாகும்”.

“ஒரு சில மாநிலங்களில் மதமாற்றக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் வருந்ததக்கது” என மனித உரிமைகள் தொடர்பான 2014-ஆம் ஆண்டு அறிக்கையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.