Home கலை உலகம் கமலின் ‘பாபநாசம்’ படத்திற்குத் திடீர் சிக்கல்: படம் வெளியாகுமா?

கமலின் ‘பாபநாசம்’ படத்திற்குத் திடீர் சிக்கல்: படம் வெளியாகுமா?

567
0
SHARE
Ad

kamals-papanasam-movie-new-posterசென்னை, ஜூன் 27 – ‘பாபநாசம்’ படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தைத் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் கமல்ஹாசனுடன் இணைந்து தயாரித்தது.

படம் வெளியான பிறகு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மற்றுமொரு படம் ஒன்றை ரூ.30 கோடியில் நடித்துத்தர கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.  அந்த நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மட்டும் கமல்ஹாசன் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஒப்பந்தம் இன்னும் போடவில்லையாம். அதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கமல்ஹாசனிடம் அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தத்திற்காக அணுகியுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் கமல்ஹாசன் ஒப்பந்தம் போடாமல் தவிர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

#TamilSchoolmychoice

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்குக்  கமல்ஹாசன் வாக்குக் கொடுத்த அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாததால் விநியோகஸ்தர்கள் ‘பாபநாசம்’ படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று பேசிவருதாகச் சொல்லப்படுகிறது.

எனவே பாபநாசம் படம் வெளியாகுமா? இல்லையா? என்பது பற்றிக் குழப்பம் எழுந்துள்ளதாம். இதுபற்றியான  பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், நாளை முடிவாகும் என்றும் தெரிகிறது.