Home உலகம் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா!

460
0
SHARE
Ad

lanka_parliament__512x288_epa_nocreditகொழும்பு, ஜூன் 27 – இலங்கை நடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் தேர்தலின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதிக்கு ஏற்ப, நடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவில் நேற்று கையெழுத்திட்ட சிறிசேனா, அந்த உத்தரவை அரசு அறிவிப்பாணையாக வெளியிட அனுப்பினார்.

#TamilSchoolmychoice

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே தற்போது அரசியலில் தீவிரம் காட்டாமல் உள்ளார். அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

எனவே, அரசியலில் மீண்டும் அதிகாரம்மிக்க இடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள இலங்கை அரசியலை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன.