Home இந்தியா சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

505
0
SHARE
Ad

rknagar_2441402fசென்னை, ஜூன் 27 – சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தொகுதியில் மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் சுமார் 38 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

27-1435372832-voters11-600இன்று நடைபெறும் இடை தேர்தலி்ல் அதிமுக சார்பில் ஜெயலலிதா, இ.கம்யூ., சார்பில் மகேந்திரன், மற்றும் டிராபிக் ராமசாமி உட்பட  28 பேர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

பதற்றமான மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் பதிவாகும் வாக்குகள் வரும் 30-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.