Home இந்தியா லலித்மோடி விவகாரம்: பிரதமர் மோடியுடன் அருண்ஜெட்லி சந்திப்பு!

லலித்மோடி விவகாரம்: பிரதமர் மோடியுடன் அருண்ஜெட்லி சந்திப்பு!

579
0
SHARE
Ad

Tamil_Daily_News_7126690149308புதுடெல்லி, ஜூன் 27 – ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் எனப் பிரதமர் மோடியைக் காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று சந்தித்துப் பேசினார். இதேபோல் கட்சியின் தலைவர் அமித்ஷாவை அவர் சந்தித்தார். தனித்தனியே நடந்த இந்தச் சந்திப்புகளின்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.