சென்னை, ஜூன்27- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி யது.
230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இவற்றில் முதன்மை அதிகாரி, வாக்குப் பதிவு அதிகாரி உள்பட 1,205 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். 276 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
வாக்குச்சாவடிகளில் 460 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டி ருந்தன. 230 கட்டுப்பாடு எந்திரங்கள் மற்றும் கூடுதல் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
பதட்டமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு ஒளிப்படக்கருவி பொருத்தப்பட்டிருந்தது. இணையதள ஒளிப்படக்கருவி (வெப்கேமரா) மூலம் தேர்தல் அதிகாரி வாக்குப் பதிவைப் பார்வையிட்டார்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப்படை வீரர்களும் எந்திரத் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
காலை 9 மணி வரை 7 சதவீத வாக்கும், 10 மணி நிலவரப்படி 13 சதவீத வாக்கும் பதிவானது.
மாலை 4 மணி நிலவரப்படி 63.5 சதவீத வாக்கு பதிவானது.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் முடிவடைந்தது.
வரும் 30-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.