Home நாடு சபா ராணாவ் வட்டாரத்தில் மீண்டும் பலவீனமான நிலநடுக்கம்!

சபா ராணாவ் வட்டாரத்தில் மீண்டும் பலவீனமான நிலநடுக்கம்!

649
0
SHARE
Ad

ராணாவ் (சபா), ஜூன் 27 – சபா மாநிலத்தில் தொடர்ந்து நில அதிர்வுகளும், நில நடுக்கங்களும் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த மாநில மக்கள் நாள் முழுவதும் அச்சத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

sabah-map-ranau

அண்மைய நாட்களில் இதுவரை 90க்கும் மேற்பட்ட தடவைகள் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபா நில நடுக்கப் பகுதியாக உருமாறியுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.35 அளவில் சபாவின் ராணாவ் பகுதியில் ரிக்டர் அளவில் 2.8 புள்ளி அளவில் பதிவான பலவீனமான நில அதிர்வு மீண்டும் தாக்கியுள்ளது.

இதனை அறிவித்த மலேசிய வானிலை ஆய்வு இலாகா இந்த நில அதிர்வு ராணாவ் நகரின் வட பகுதியில் உருவானது என்று அறிவித்தது எனப் பெர்னாமா செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.