Home கலை உலகம் பாகுபலி கண்டு பம்முகிறார் மகேஷ்பாபு!

பாகுபலி கண்டு பம்முகிறார் மகேஷ்பாபு!

592
0
SHARE
Ad

01062015_maheshbabuஆந்திரா, ஜூன் 27- மகேஷ்பாபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. முழு வேலைகளும் முடிந்து கோடையிலேயே வெளியாக வேண்டிய இப்படம், இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கெல்லாம் காரணம், பாகுபலி படமும் கோடையில் வெளியாகிறது என்ற பயமே எனப் பேசப்படுகிறது.

பாகுபலி படத்தினால் தான் ஸ்ரீமந்துடு தள்ளிப்போகிறதா என்று மகேஷ்பாபுவிடம் கேட்டதற்கு, “இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் மரியாதைக்குரிய படம் பாகுபலி. தெலுங்கில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டதற்குத் தெலுங்கு சினிமாவே பெருமையடைய வேண்டும்.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தைப் பார்த்துப் பயம் ஏதும் கிடையாது. அந்தப்படத்திற்காக ஸ்ரீமந்துடு 3 வாரம் கழித்தே வெளியாகிறது. என் படத்தால் பாகுபலி படத்திற்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது!

மேலும் இடைவெளிவிட்டு பெரிய முதலீட்டுப் படங்கள் வெளியாவது ஆரோக்கியமான ஒன்றே” என்றார் மகேஷ்பாபு.

பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி வரும் ஜூலை 10ஆம் தேதி உலக அரங்கில் வெளியாகிறது.

அதைத் தொடர்ந்து ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு படத்தின் இசையும், ஆகஸ்ட் 7ஆம் தேதி படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.