Home இந்தியா மிகப் பிரபலமான பெண்கள் – முதலிடத்தில் சோனியா

மிகப் பிரபலமான பெண்கள் – முதலிடத்தில் சோனியா

692
0
SHARE
Ad

soniaபுதுடில்லி, மார்ச்.8- நாட்டில் மிகவும் பிரபலமான பெண்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து  முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

உலக மகளிர் தினத்தையொட்டி நாட்டில்  மிகவும் பிரபலமான பெண்கள் யார் என்ற ஆய்வை அகில இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, “அசோசெம்’ அமைப்பு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் இணைந்து நடத்தியது.

#TamilSchoolmychoice

தலைநகர் டில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் புனே நகரங்களில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, வங்கிகள் மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில்  காங்கிரஸ் தலைவர் சோனியா மிகவும் பிரபலமானவர்களில் முதலிடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து  ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தா கோச்சார் இரண்டாம் இடத்தையும், பெப்சி நிறுவன முதன்மை செயல் அலுவலர் இந்திரா நூயி, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேபோல் பைகான் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் கிரண் மஜும்தார் நான்காம் இடத்தையும் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ்  16ம் இடத்திலும்,  தமிழக முதல்வர் ஜெயலலிதா 17ம் இடத்திலும்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 18ம் இடத்திலும், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் 19ம் இடத்திலும், லோக்சபா எம்.பி.,யும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் 20ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.