Home நாடு ஊடுருவல்காரர்களின் தலைவன் கொல்லப்பட்டான்- பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது

ஊடுருவல்காரர்களின் தலைவன் கொல்லப்பட்டான்- பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது

589
0
SHARE
Ad

lead13லகாட் டத்து, மார்ச் 8 – மலேசியப் படையினரால் நடத்தப்பட்டு வரும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் அதன் தலைவனோடு சேர்த்து இதுவரை 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்தவாரம் தொடங்கி கம்போங் தண்டுவோ மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்பட்டுவரும் இந்நடவடிக்கையில், நேற்று 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ” ஜெனரல்” என்ற உயர் பதவியில் இருப்பவர் என்று நம்புவதாக தலைமை காவல்துறை அதிகாரி டான் ஸ்ரீ இஸ்மாயில் ஓமர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இன்னும் சில ஊடுருவல்காரர்கள் கம்போங் தஞ்சோங் மற்றும் கம்போங் தண்டுவோவிலும் ஒளிந்திருக்கக் கூடும் என்று ஓமர் கூறினார்.