Home உலகம் தைவான் தீ விபத்து: காயமடைந்தவர்களில் 20 வயது பெண் பலி!

தைவான் தீ விபத்து: காயமடைந்தவர்களில் 20 வயது பெண் பலி!

699
0
SHARE
Ad

Taiwanதைபே, ஜூன் 29 – தைவானில் நேற்று நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில், வண்ணப்பொடி தூவும் விளையாட்டின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 500 பேரில், 90 சதவிகிதம் தீக்காயமடைந்த 20 வயது பெண் இன்று சிகிச்சைப் பலனின்றி பலியானதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

லீ பெய் யுன் (வயது 20) என்ற அந்தப் பெண், தனது 12 வயது சகோதரருடன் மேடைக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

80 சதவிகிதத் தீக்காயங்களுடன் அப்பெண்ணின் சகோதரர் தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மத்திய தைவானில் உள்ள சங் சான் மருத்துவமனையில், லீ பெய் யுன் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.