Home இந்தியா இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்  

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்  

765
0
SHARE
Ad

Earthquake-delhiகவுகாத்தி, ஜூன்29- அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் நேற்று காலை 6.35 மணி அளவில் கோக்ரஜார் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இதன் தாக்கம் தலைநகர் கவுகாத்தி, பக்கத்து மாநிலங்களான மேகாலயா, மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடுகளான நேபாளம், வங்காளதேசம், பூடான் ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

#TamilSchoolmychoice

நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகளில் கண்ணாடிச் சன்னல்கள் நொறுங்கி விழுந்தன. தொலைக்காட்சி முதலான பொருட்கள்  கீழே விழுந்து உடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

நில நடுக்கத்தின்போது அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் தொடர்வண்டி நிலையத்தின் அருகில் இருந்த பழைய சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கிக் கொண்ட காய்கறி வியாபாரிகள் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

நில நடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை அதிகாரி பிரமோத் குமார் திவாரி தெரிவித்தார்.