Home கலை உலகம் விஷால் போன்ற நடிகர்களுக்கு ராதிகா அறிவுரை!

விஷால் போன்ற நடிகர்களுக்கு ராதிகா அறிவுரை!

535
0
SHARE
Ad

???????????????????????????????????????சென்னை, ஜூன் 29- முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதாவின் மகன் சித்து நாயகனாக அறிமுகமாகும் படம் ‘உயிரே உயிரே’.

இந்தp படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் பேசிய போது:

‘‘இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்  மகிழ்ச்சியாகக் கலந்து கொள்கிறோம்.

#TamilSchoolmychoice

ஆனால், இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் இப்படி இருப்பதில்லை. சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் மீதே சேற்றை வாரி வீசுகிறார்கள்.

கீழே படுத்துக்கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

நடிகர் சங்கப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகை ராதிகா  இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் கணவர் சரத்குமாருடன் மோதும் விஷால், கார்த்தி, ஜீவா போன்றவர்களை மனதில் வைத்துத்தான் அவர் இப்படி பேசினாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.