Home இந்தியா சாலையில் எச்சில் துப்புவோர், குப்பை வீசுவோருக்குச் சிறைத் தண்டனை!

சாலையில் எச்சில் துப்புவோர், குப்பை வீசுவோருக்குச் சிறைத் தண்டனை!

724
0
SHARE
Ad

புதுடில்லி, ஜூன் 29- சாலைகள் மற்றும் தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புறச் சுகாதாரத்தைக்  கெடுப்போருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

spitஇதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின், ‘துாய்மை இந்தியா’ திட்டத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளில், ‘சுவச் பாரத்’ எனப்படும் துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து துடைப்பத்தைக் கையிலெடுத்தார் மோடி.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் இருப்பது போல் துாய்மைப் பராமரிப்புக்காகச் சட்டம் கொண்டு வருவதற்காகச் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைப்படி மத்திய அரசு, புதிய வரைவுத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அதில், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை போடுவோர், எச்சில் துப்புவோர், திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்போர் போன்றவர்களுக்கு அபராதமும்
தண்டனையும் விதிப்பது என்பது உட்பட சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

kuppaiஇந்தத் திட்டம் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட உள்ளது.

இந்தப் புதிய திட்டப்படி, சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவோரைத் தண்டிக்கும் அதிகாரம், அந்தந்தப் பகுதியில் உள்ள நகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும்.