Home கலை உலகம் ‘இன்று நேற்று நாளை’ படம் வசூலில் சாதனை: 2-ம் பாகம் எடுக்க முடிவு!

‘இன்று நேற்று நாளை’ படம் வசூலில் சாதனை: 2-ம் பாகம் எடுக்க முடிவு!

588
0
SHARE
Ad

Indru-Netru-Naalai-Movie-Stills-23சென்னை, ஜூன் 30 – விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘இன்று நேற்று நாளை’. படம் வெளியான நாள் முதலே இப்படம் வசூல் வேட்டையைத் தொடங்கியது.

படம் வெளிவந்து 3 நாட்களில் இதுவரை ரூ.9 கோடி வரை இப்படம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படம் தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பால் இப்படம் கூடுதலாக இன்னும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்குத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  ‘இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.

inru-netru-naalai1முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே, இரண்டாம் பாகத்தின் கதையையும் படக்குழுவினர் உறுதி செய்துவிட்டனர். இந்த இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.  ‘இன்று நேற்று நாளை’ படத்தைத் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாகச் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். அபி நிறுவனம் சார்பாக அபினேஷ் இளங்கோவன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.