Home நாடு ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு!

ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு!

471
0
SHARE
Ad

RON97 is now RM3 Sep 6 2012கோலாலம்பூர், ஜூலை 1 – இன்று முதல் ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்வதாக உள்நாட்டு வாணிபம், கூட்டறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹசான் மாலிக் நேற்று அறிவித்துள்ளார். எனினும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

அதன் படி, ரோன்95 பெட்ரோல் அதன் முந்தைய விலையான 2.05 ரிங்கிட்டில் இருந்து 10 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவும், ரோன்97 பெட்ரோல் அதன் முந்தைய விலையான 2.35 ரிங்கிட்டில் இருந்து 20 காசுகள் உயர்ந்து 2.55 ரிங்கிட்டாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி லிட்டருக்கு 2.05 ரிங்கிட்லேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.