Home கலை உலகம் விவாகரத்தை அறிவித்த ஹாலிவுட்டின் பென்-கார்னர் தம்பதி!

விவாகரத்தை அறிவித்த ஹாலிவுட்டின் பென்-கார்னர் தம்பதி!

545
0
SHARE
Ad

Ben Affleck & Jennifer Garner Take Seraphina Toy Shoppingகோலாலம்பூர், ஜூலை 1 – ‘பியல் ஹார்பர்’ (Pearl Harbor), ‘டேர் டெவில்ஸ்’ (Dare Devils) போன்ற படங்களைப் பார்த்தவர்கள் பென் ஆஃப்லெக் (42), ஜெனிஃபர் கார்னர் (43) தம்பதிகளை மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஹாலிவுட்டின் காதல் தம்பதியாய் வலம் வந்த இவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு, பிரபலங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “எங்கள் இருவரின் திருமண வாழ்க்கை கசந்து விட்டது. நாங்கள் பிரிய முடிவு செய்துவிட்டோம்” என்ற அவர்களின் கூட்டு அறிக்கை தான் இந்தப் பரபரப்பிற்குக் காரணம்.

கடந்த 2005-ம் ஆண்டு, ஜூன் 29-ம் தேதி திருமணம் செய்து கொண்ட பென்னும், ஜெனிஃபரும், சரியாகத் தங்கள் 10-ம் ஆண்டுத் திருமணக் கொண்டாட்டங்களை முடித்து விட்டு மறுநாள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மூன்று குழந்தைகளின் பெற்றோரான இந்தத் தம்பதிகளின் மனக்கசப்பிற்கு என்ன காராணம் என்பது தெளிவாகவில்லை. இது தொடர்பாக அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “எங்களின் திருமண முறிவு பற்றிப் பொது ஊடகங்களில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மிக நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்.”

“எனினும், எங்களின் இந்தப் பிரிவு, எக்காரணத்தைக் கொண்டும் எங்கள் குழந்தைகளைப் பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். அந்தப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Ben Affleck and Jennifer Garner dispel divorce rumors with a family lunchமன முறிவு குறித்து ரேடார் வெளியிட்டுள்ள புகைப்படம்

இதற்கிடையே, இவர்களின் பிரிவுக்கான காரணங்கள் குறித்து அமெரிக்கப் பத்திரிக்கைகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். பிரபல ரேடார் இணையதளம், “பென்,  ஜெனிஃபர் மற்றும் குழந்தைகள் அருகில் இருக்கும்போதே, வேறு ஒரு பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தது தான், இன்று மண முறிவு வரை கொண்டு சென்றுள்ளது” என்று பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பென் ஆஃப்லெக், ஜெனிஃபர் கார்னரைத் திருமணம் செய்வதற்கு முன், ஹாலிவுட் பிரபல நடிகை ஜெனிஃபர் லோபஸுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.