Home உலகம் இலங்கையின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது:சிறீசேனா திட்டவட்டம்!

இலங்கையின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது:சிறீசேனா திட்டவட்டம்!

553
0
SHARE
Ad

maxresdefaultகொழும்பு, ஜூலை 1-இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அறிவிக்க முடியாது என இலங்கை அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறுமானால், தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் கருத்திற்கு ஏற்ப, பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice