கோலாலம்பூர் – சரவாக் ரிப்போர்ட் நிறுவனர் கிளேர் ரியூகேஸ்டில் பிரவுனின் பெயரை இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையின் சிவப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்துலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவிக்க புத்ராஜெயா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இது குறித்து விஸ்டில்புளோவர் ( whistle blower) இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்போல் பொதுச்செயலாளரும், அரசு சாரா இயக்கங்களில் நியாயமான அனைத்துலக விசாரணை அமைப்பின் தலைவருமான ஜர்ஜென் ஸ்டாக் டு ஜாகோ ரூசெல் வெளியிட்டுள்ள கடிதத்தில் மலேசிய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, ஜர்ஜென் அனுப்பியுள்ள கடிதத்தில், மலேசிய அரசாங்கத்தின் கோரிக்கையை உறுதிசெய்ததோடு, தாங்கள் கடந்த ஆகஸ்ட் 9 -ம் தேதியே அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.