Home Featured நாடு நஜிப் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்!

நஜிப் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்!

873
0
SHARE
Ad

Aninaகோலாலம்பூர் – 2.6 பில்லியன் நன்கொடை பெறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினரான அனினா சாடுடின் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்துள்ளார்.

அனினா நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதம் கெடா அம்னோ செயலாளர், லங்காவி அம்னோ செயலாளர், லங்காவி அம்னோ மகளிர் பிரிவின் துணை செயலாளர் மற்றும் அம்னோ தலைமையக உறுப்பினர்கள் பிரிவு ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice