மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய அந்த இரு மர்ம நபர்களும் தீவிரவாத தம்பதியர் என அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது. சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28), தஸ்பீன் மாலிக்(27) என அந்த இருவரையும் காவல்துறை சுட்டுக் கொன்றது.
இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தளபதியான ஜஸ்ரவி தேஸ் என்பவன் தனது டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவலில், “தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியினர் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள். இஸ்லாமியர்களை கொன்று குவித்து வரும் அமெரிக்காவிற்கு எதிராக அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளான்.