Home Featured உலகம் கலிஃபோர்னியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள்!

கலிஃபோர்னியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள்!

808
0
SHARE
Ad

americaசான் பெர்னார்டினோ – அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாகினர். வழக்கமாக அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூடு என நம்பப்பட்ட நிலையில், அது தீவிரவாத தாக்குதல் என கண்டறியப்பட்டுள்ளது.

மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய அந்த இரு மர்ம நபர்களும் தீவிரவாத தம்பதியர் என அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது. சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28), தஸ்பீன் மாலிக்(27) என அந்த இருவரையும் காவல்துறை சுட்டுக் கொன்றது.

இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தளபதியான ஜஸ்ரவி தேஸ் என்பவன் தனது டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவலில், “தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியினர் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள். இஸ்லாமியர்களை கொன்று குவித்து வரும் அமெரிக்காவிற்கு எதிராக அவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளான்.

#TamilSchoolmychoice

sanஅமெரிக்காவிற்குள்ளும் ஐஎஸ் இயக்கத்தினர் நுழைந்துள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.