Home Featured இந்தியா “3 லட்சம் இந்திய கிராமங்களை இணைப்போம்” – கூகுள் தலைவர் அறிவிப்பு!

“3 லட்சம் இந்திய கிராமங்களை இணைப்போம்” – கூகுள் தலைவர் அறிவிப்பு!

635
0
SHARE
Ad

sundarபுது டெல்லி – ‘கூகுள் ஃபார் இந்தியா’ (Google For India) நிகழ்ச்சிக்காக இன்று, இந்தியா வந்துள்ள கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, கூகுள் அடுத்ததாக செயல்படுத்த இருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முன்னதாக கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் உரையாற்றிய சுந்தர் பிச்சை, கூகுள் செயல்திட்டங்கள் மூலம் அடுத்த 3 வருடங்களில், 3 லட்சம் இந்திய கிராமங்களை இணையத்தால் இணைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் இருக்கும் 100 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியையும், கூகுள் செயல்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஐதராபாத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய தொழில்நுட்ப வளாகம் ஒன்றை கூகுள் அமைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.