Home Featured உலகம் இதுவரை நாம் பார்த்திராத இயேசு – இங்கிலாந்து ஓவியரின் புது முயற்சி!

இதுவரை நாம் பார்த்திராத இயேசு – இங்கிலாந்து ஓவியரின் புது முயற்சி!

520
0
SHARE
Ad

christலண்டன் – நாம் இதுவரை புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் பார்த்த இயேசுவின் தோற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தை விஞ்ஞான முறையில் வரைந்து, இயேசு இப்படி தான் இருந்தார் என நிரூபிக்கும் முயற்சியில் இங்கிலாந்து மருத்துவத் துறை ஓவியர் ஒருவர் இறங்கி உள்ளார்.

மான்செஸ்டர் பல்கலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரிச்சர்ட் நீவ் என்ற அந்த ஓவியர்,  இயேசு கிறிஸ்து வாழ்ந்தாகக் கூறப்படும் ஜெருசலேம் நகரில் பல மாதங்களாக முகாமிட்டு, அந்த பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகள், பல்வேறு தடயவியல் பொருட்கள் போன்றவற்றை, பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி  3 டி முறையில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

ஏற்கனவே நாம் பார்த்து வந்த இயேசுவின் ஓவியத்தில், அவருக்கு இருக்கும் நீண்ட தலை முடி, ஒடுங்கிய கன்னங்கள், சிவந்த நிறம் என எதுவும், ரிச்சர்ட் நீவ் வரைந்துள்ள ஓவியத்தில் இல்லை. அவரின் ஓவியத்தில் இயேசு சாதாரண மனிதர் போலவே காட்சியளிக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த  புகைப்படம் குறித்து, கலிபோர்னியா பல்கலைக்கழக மானுடவியல் துறை பேராசிரியர் அலிசன் கோல்லாவே கூறுகையில், ”இந்த முறையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், ஓரளவிற்கு உண்மையாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியினை அடிப்படையாகக் இன்னும் பல்வேறு மகான்களின் உண்மையான முகத் தோற்றத்தை அறிந்து கொள்ள முடியும் என்று கூறி வருகின்றனர்.